கடவுச்சீட்டு உள்ளிட்ட இரகசிய ஆவணங்கள் அச்சிடுவதில் அரசின் தீர்மானத்தில் மாற்றம் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

கடவுச்சீட்டு உள்ளிட்ட இரகசிய ஆவணங்கள் அச்சிடுவதில் அரசின் தீர்மானத்தில் மாற்றம்

கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்களை அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான இரகசிய ஆவணங்கள் தற்போது வெளிநாட்டு அச்சக நிறுவனங்களில் அச்சிடப்படுவதனால் நாட்டில் இருந்து வெளியே செல்லும் அந்நியச் செலாவணியை நாட்டிற்குள் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று (17) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறானவற்றை அரசாங்க அச்சக திணைக்களத்தில் அச்சிடுவதற்கு தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் வெகுஜன ஊடக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அது தொடர்பான திட்டம் குறித்து விரிவான வகையில் மதிப்பீடு செய்வதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்திடம் வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad