பொறியியலாளர் சிப்லி பாறூக் இராஜினாமா - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

பொறியியலாளர் சிப்லி பாறூக் இராஜினாமா

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபையின் உப தலைவர்களில் ஒருவராக இன்று தெரிவு செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாக சபையின் உப தலைவர் பதவியிலிருந்தும் நிருவாக சபையிலிருந்தும் இன்று மாலை இராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்த கருத்து தெரிவித்த அவர் ஏற்கனவே ரஊப் ஹாஜியர் முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு தலைவராக இருந்த போது பள்ளிவாயலின் நிதிக் கணக்கு விடயங்களில் தெளிவு இருக்கவில்லை. அது தொடர்பாக கேள்விகள் அப்போது எழுப்பப்பட்ட போது சரியான பதில் கிடைக்க வில்லை.

ரஊப் ஹாஜியாரின் தலைமைத்துவக் காலத்தில் பள்ளிவாயல் நிதிக் கணக்கு விடயங்களுக்காக கணக்காய்வாளர் ஒருவரை நியமித்து அதனை ஆய்வு செய்வதற்கு முயற்சித்து கணக்காய்வாளர் நியமிக்கப்பட்ட போதும்கூட ரஊப் ஹாஜியார் அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவில்லை.
இவ்வாறான ஒரு தலைவரின் கீழ் நான் நிருவாக சபையில் உப தலைவராகவோ அல்லது நிருவாக சபை உறுப்பினராகவோ இருப்பதற்கு விரும்பாததால் நான் எனது உப தலைவர் பதவியிலிருந்தும் நிருவாக சபையிலிருந்தும் இராஜினாமா செய்துவிட்டேன் எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad