மனநோயாளி ஒருவர் அதிகாரத்தை கைப்பற்றினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் - கரு ஜயசூரிய - News View

About Us

About Us

Breaking

Thursday, September 17, 2020

மனநோயாளி ஒருவர் அதிகாரத்தை கைப்பற்றினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் - கரு ஜயசூரிய

உத்தேச 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் மனநோயாளி ஒருவர் அதிகாரத்தை கைப்பற்றினால் பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 20ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எவரும் அடிப்பணியாது போனால் அவரை தலையை சுற்றியெறியும் மோசமான அதிகாரங்கள் இத்திருத்தத்திடன் ஊடாக ஜனாதிபதிக்கு கிடைக்கும். உத்தேச திருத்தத்தின் மூலம் நாட்டின் 21 மில்லியன் பிரஜைகளின் உரிமைகளும் ஒரு நபருக்கு பெற்றுக் கொடுக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் 200 கைத்தொழில்கள் மூடப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் தெற்காசியாவின் உயர்ந்த வாழ்க்கைச் செலவை கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ள சந்தர்ப்பத்தில் 20ஆவது திருத்தச்சட்டத்தை ஏன் அவசரமாக நிறைவேற்ற முற்படுகின்றனர். 

தேர்தலுக்கு முன்னர் 20ஆவது திருத்தச் சட்டத்தின் வரைபை மக்களிடம் கையளித்திருந்தால் 69 இலட்சம் மக்கள் வாக்களிப்பது குறித்து சிந்தித்திருப்பார்கள் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment