9 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை - உலுக்கி எடுக்கும் கொரோனா உலக நாடுகள் திணறல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

9 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை - உலுக்கி எடுக்கும் கொரோனா உலக நாடுகள் திணறல்

அதிகரிக்கும் கொரோனா பலி: திணறும் உலக நாடுகள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,016 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, 2 கோடியே 74 லட்சத்து 78 ஆயிரத்து 134 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 70 லட்சத்து 9 ஆயிரத்து 235 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 337 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 1 கோடியே 95 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 96 ஆயிரத்து 406 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 1,93,534
பிரேசில் - 1,27,001
இந்தியா - 71,642
மெக்சிகோ - 67,558
இங்கிலாந்து - 41,554
இத்தாலி - 35,553
பிரான்ஸ் - 30,726
ஸ்பெயின் - 29,516
பெரு - 29,838
ஈரான் - 22,410

No comments:

Post a Comment