இலங்கையில் 72 மணி நேரத்தில் 89 கொரோனா தொற்றாளர்கள் - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

இலங்கையில் 72 மணி நேரத்தில் 89 கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் 72 மணிநேரத்தில் 89 புதிய கொரோனா தொற்றாளர்கள் ~ Jaffna Muslim
நாட்டில் கடந்த 72 மணி நேரத்தில் 89 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களை தொடர்ந்தும் கடைபிடிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த கொரோனா தொற்றாளர்களில் 1,197 பேர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் ஆவர். அவர்களில் 42 வெளிநாட்டினர் என்பதுடன் 1,155 பேர் இலங்கையர்கள்.

இதேவேளை பாடசாலை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுவதால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சுகாதார உத்தரவுகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு கற்பிப்பது அவசியமாகும் என்றும் இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad