3.9 மில்லியன் ரூபாவை சேமிக்க அமைச்சர் நாமலின் புதிய திட்டம் ! - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

3.9 மில்லியன் ரூபாவை சேமிக்க அமைச்சர் நாமலின் புதிய திட்டம் !

நாமலின் புதிய திட்டம், மாதாந்தம் 3.9 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் ~  Jaffna Muslim
நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர் விவகார அமைச்சரான நாமால் ராஜபக்ஷ இளைஞர் விவகார அமைச்சை உலக வர்த்தக மையத்திலிருந்து கொழும்பில் உள்ள சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம் மாதந்தம் 3.9 மில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என அமைச்சர் நாமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இளைஞர் விவகார அமைச்சு தற்போது உலக வர்த்தக மையத்தில் இயங்கி வருகிறது. அமைச்சு கட்டடத்திற்காக மாதாந்தம் 3.9 மில்லியன் ரூபா வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய, எதிர்வரும் 2021 மார்ச் மாதம் உலக வர்த்தக மையத்தின் ஒப்பந்தம் நிறைவடைந்தவுடன் அமைச்சை சுகததாச விளையாட்டு வளாகத்திற்கு மாற்றுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad