கண்ணாடி என தெரிவித்து 33,000 கிலோ மஞ்சள், 3,000 கிலோ உளுந்து இறக்குமதி - 10 பேர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, September 17, 2020

கண்ணாடி என தெரிவித்து 33,000 கிலோ மஞ்சள், 3,000 கிலோ உளுந்து இறக்குமதி - 10 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 33,000 கிலோ மஞ்சள் மற்றும் 3,000 கிலோ கிராம் உளுந்து அடங்கிய 3 கொள்கலன்களுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு துறைமுகத்திலுள்ள ப்ளூமெண்டல் வாகன களஞ்சியசாலையில் வைத்து இச்சந்தேகநபர்கள் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கண்ணாடி இறக்குமதி என்ற போர்வையில், குறித்த மஞ்சள் சட்டவிரோதமான முறையில் துபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பில் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதோடு, அவற்றை கொண்டு வந்து விநியோகித்த பிரதான சந்தேகநபரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றார். 

இதேவேளை சிலாபம், மோயகட்ட பிரதேசத்தில் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1,000 கிலோகிராம் மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad