20 குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை - பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 29, 2020

20 குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முறையான தீர்மானத்தை எடுக்கவில்லை - பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர்

20 ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இதனைக் குறப்பிட்டுள்ளார்.

ஏறாவூரில் நேற்று இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். அத்துடன், 20 ஆவது திருத்த சட்டமூலம், இன்னும் முழுமை பெறாத நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, 20 ஆவது திருத்தம் தொடர்பில் பொறுமையாக செயற்பட்டு, இறுதி நேரத்திலேயே சரியான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்து கலந்துரையாட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் நசீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்திற்கு சிறுபான்மை கட்சிகள் ஆதரவு வழங்கிய போதிலும், நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களை ஏமாற்றியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நசீர் அஹமட் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தினகரன்

No comments:

Post a Comment

Post Bottom Ad