ஐ.பி.எல். சென்னை வீரர்கள் 2 பேர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 8, 2020

ஐ.பி.எல். சென்னை வீரர்கள் 2 பேர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா

IPL 2020: Two players, 11 others test positive for Covid-19 - BCCI || கொரோனா  பாதித்த ஐபிஎல் வீரர்கள் 2 பேர் உட்பட 13 பேர் துபாயில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - பிசிசிஐ
நடப்பு ஆண்டு ஐ.பி.எல். ரி-20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ளது.

பிளே ஒஃப் சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மொத்தம் 53 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி தொடர், இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே மிக நீண்ட தொடராகும்.

கடந்த மாத இறுதியில் போட்டி அட்டவணை வெளியிடப்பட இருந்தது. ஆனால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 13 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாலும், அபுதாபி மற்றும் டுபாயில் வீரர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு வெவ்வேறு விதிகள் விதிக்கப்பட்டதாலும் அட்டவணையை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை அணி வீரர்களான தீபக் சாஹர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 13ஆவது அத்தியாத்தம், செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில், அபுதாபி, ஷார்ஜா மற்றும் டுபாய் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது.

டுபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad