இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான நிகழ்வு - News View

Breaking

Post Top Ad

Thursday, September 3, 2020

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான நிகழ்வு

கல்முனையில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154வது ஆண்டு நிறைவை முன்னிட்டு  சிரமதான பணி
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையமும், சாய்ந்தமருது பிரதேச செயலகமும் மற்றும் கல்முனை மாநகர சபையின் சாய்ந்தமருது ஏ வலயத்தின் திண்மக் கழிவகற்றல் பிரிவும் இணைந்து சாய்ந்தமருது கரையோர பிதேசத்தில் சிரமதானம் பணி இன்று (03) முன்னெடுக்கப்பட்டது. 

மேற்படி நிகழ்வானது அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக ஜெயசுந்தரவின் வழிகாட்டலிலும், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் தலைமையிலும், கல்முனை சமூக பொலிஸ் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட்டின் நெறிப்படுத்தலிலும் இச்சிரமதானம் இடம்பெற்றது.

இதன்போது கரையோர சூழலிலுள்ள கழிவுப் பொருட்களை அகற்றப்பட்டு கரையோரச் சூழல் சுத்தப்படுத்தப்பட்டதோடு குறிப்பாக சுற்றுச்சூழல் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாகவும் குறித்த சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

இச்சிரமதானத்தில் கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், பொதுமக்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இளைஞர்கள், கல்முனை மாநகர சபை ஊழியர்கள் என பலரும் கலந்து சிரமாதன பணியில் ஈடுபட்டனர்.

(எம்.என்.எம்.அப்ராஸ், யூ.கே. காலித்தீன் )

No comments:

Post a Comment

Post Bottom Ad