உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சட்டத்தரணி சனூஸ்க்கு சட்டத்தரணி ஹபீப் றிபான் வாழ்த்து - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட சட்டத்தரணி சனூஸ்க்கு சட்டத்தரணி ஹபீப் றிபான் வாழ்த்து

உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (28) உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதியிலுள்ள, ஓட்டாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது சனூஸ் (நளீமி) சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். 

இந்நிகழ்வில் சட்டத்தரணி ஹபீப் றிபான் கலந்துகொண்டதுடன் சத்தியப்பிரமாணம் செய்த சட்டத்தரணி சனூஸ்க்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். 

ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் நளீமி பட்டத்தை முடித்துக்கொண்டு, அதனைத் தொடர்ந்து சட்டத்தரணியாக தனது தொழிலினை ஆரம்பித்த சட்டத்தரணி சனூஸ் போன்று எமது பிரதேச இளைஞர்களும் பல் பிரசித்தி பெற்ற அறிவு கொண்டவர்களாக உருவாக வேண்டும் எனவும் சட்டத்தரணி ஹபீப் றிபான் கூறினார்.

ரணீஸ் முஹம்மட்

No comments:

Post a Comment

Post Bottom Ad