போதையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி கைது - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

போதையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி கைது

போதையில் மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி சாரதி கைது-Three Wheeler Driver Arrested while Driving with Students on Drunk
மதுபானம் அருந்திய நிலையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (28) பலாங்கொடை, தும்பகொடை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி வீதியில் ஒழுங்கீனமாக சென்றதை அவதானித்த பிரதேசவாசிகள், கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசாருக்கு அறிவித்ததற்கு இணங்க பின்தொடர்ந்து வந்த போக்குவரத்துப் பொலிசார் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருப்பதாக தெரிவித்த பொலிசார் முச்சக்கர வண்டியை பொலிஸ் நிலையக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவுவும் தெரிவித்தனர்.

(இரத்தினபுரி நிருபர் - பாயிஸ்)

No comments:

Post a Comment

Post Bottom Ad