ஐக்கிய தேசிய கட்சியை சஜித்திற்கு விற்க கரு முயற்சியா? - வஜிர குற்றச்சாட்டு - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

ஐக்கிய தேசிய கட்சியை சஜித்திற்கு விற்க கரு முயற்சியா? - வஜிர குற்றச்சாட்டு

ஐக்கிய தேசிய கட்சியை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய மக்கள் சக்திக்கு விற்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு விடுக்கும் அழைப்பிலிருந்து இது தெளிவாகிறதென அவர் தெரிவித்தார். 

கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியின் 17 அமைச்சர்களுடன் அப்போதைய அரசாங்கத்தில் ஒன்றாக சேர்ந்திருந்தார். அன்று அத்தகைய நபராக இருந்த இவர் இன்று கட்சியின் முன்னேற்றம் குறித்துப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறதென அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தை சட்டப்பூர்வமாகக் கைப்பற்ற ஐக்கிய மக்கள் சத்திக்கு முடியாதென்பதால் சதித்திட்டங்கள் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற செயலாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் எக்காரணம் கொண்டும் ஐக்கிய தேசிய கட் சியை அழிக்க சதிகாரர்களுக்கு இடம்கொடுக்கமாட் டோமென வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad