பாரிய இயற்கை அழிவுகளை எதிர்கொண்டுள்ள கற்பிட்டி இலந்தையடி பகுதி..! - News View

Breaking

Post Top Ad

Monday, August 31, 2020

பாரிய இயற்கை அழிவுகளை எதிர்கொண்டுள்ள கற்பிட்டி இலந்தையடி பகுதி..!

பாரிய இயற்கை அழிவுகளை எதிர்கொண்டுள்ள கற்பிட்டி இலந்தையடி பகுதி..! |  Virakesari.lk
புத்தளம், கற்பிட்டி பிரதேச சபைக்குற்பட்ட நுரைச்சோலை இலந்தையடி பகுதியிலுள்ள கடற்கரையின் கரையோரப் பகுதிகள் கடலரிப்பினால் பாரிய இயற்கை அழிவுகளை எதிர்கொண்டுள்ளன.

இலங்கையின் சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமானதாக விளங்கும் கற்பிட்டி பிரதேசத்தில் இவ்வாறு பாரிய கடலரிப்பினால் நுரைச்சோலை கரையோரப் பகுதியின் கொய்யாவாடி, இலந்தையடி மற்றும் ஆலங்குடா ஆகிய பிரதேசங்களுக்கு சுற்றுலா வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலந்தையடி கடற்பிரதேசத்தில் சுமார் ஒரு கிலோ மீற்றர் வரையிலான கடற்பகுதி இவ்வாறு கடல் அரிப்பிற்குள்ளாகியிருப்பதாக அந்தப் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

சுனாமி பாதுகாப்புக்காகவும், சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காகவும் இளந்தையடி கரையோரப் பகுதிகளில் சவுக்கு மரங்கள் நாட்டப்பட்ட போதிலும் தற்போது தீவிரமான கடலரிப்பினால் அந்த மரங்கள் சரிந்து கீழே வீழ்ந்து கிடக்கின்றன.

அத்துடன், இந்தப் பிரதேசத்தில் கடலரிப்பை தடுப்பதற்காக பாரிய கருங்கற்கல் போடப்பட்டுள்ள போதிலும் கடலரிப்பின் தீவிரம் குறையவில்லை எனவும் இந்தப் பிரதேசத்தில் வாழும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாரிய இயற்கை அழிவுகளை எதிர்கொண்டுள்ள கற்பிட்டி இலந்தையடி பகுதி..! |  Virakesari.lk

No comments:

Post a Comment

Post Bottom Ad