யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார் - News View

Breaking

Post Top Ad

Thursday, August 27, 2020

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்றார்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று (வெள்ளிக்கிழமை) காலை மிக எளிமையாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளைத் தொடர்ந்து, பீடாதிபதிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்களால் துணைவேந்தர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்துக்கமைவாக, ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள தத்துவத்தின்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் நேற்று அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் துணைவேந்தர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad