யாசகர் கொலை - பெண் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, August 28, 2020

யாசகர் கொலை - பெண் கைது

அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகாண பொறியியலாளர் அலுவலகத்திற்கு அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ஒரு யாசகர் எனத் தெரியவந்துள்ளது. இக்கொலைச் சம்பவம் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad