இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு - News View

Breaking

Post Top Ad

Sunday, August 30, 2020

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பு

எயிட்ஸ் : 20 கர்ப்பிணிப் பெண்களுக்கு | Virakesari.lk
(எம்.மனோசித்ரா)

நாட்டில் இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 19 - 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அதிகளவில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டிருப்பதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அறிவியல் கணக்கெடுப்புக்களின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டு நாட்டில் 3600 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளாகியிருக்க வேண்டும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கிளினிக்குகளில் பதிவு செய்து 2000 பேர் மாத்திரமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எஞ்சியுள்ள 1600 பேர் தாம் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையை அறியாமல் சமூகத்தில் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்க முடியும். இவர்களால் தொற்று அற்றவர்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படக் கூடும். 

கிளினிக்குகளுக்கு வருகை தருபவர்களது இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்பதோடு இரத்த பரிசோதனையும் இலசவமாக முன்னெடுக்கப்படுகிறது. இவை அனைத்தையும் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விஷேட வேலைத்திட்டத்தை அடுத்த மாதம் முதல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad