கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில் தொடர்ந்து முன்னிலை - News View

About Us

About Us

Breaking

Thursday, August 27, 2020

கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில் தொடர்ந்து முன்னிலை

கொரோனா வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில் தொடர்ந்து முன்னிலை - அப்டேட்ஸ்
உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியின் இறுதி கட்டத்தை விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்தை கடந்துள்ளது.

குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகமெடுத்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில்75,760 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 699 பேருக்கும், பிரேசிலில் 42 ஆயிரத்து 489 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 46 லட்சத்து 5 ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்
அமெரிக்கா - 60,46,064
பிரேசில் - 37,64,493
இந்தியா - 33,10,235 
ரஷியா - 9,75,576
தென் ஆப்பிரிக்கா - 6,18,286
பெரு - 6,13,378
கொலம்பியா - 5,82,022
மெக்சிகோ - 5,73,888
ஸ்பெயின் - 4,51,792
சிலி - 4,04,102

No comments:

Post a Comment