ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம் : 300 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, August 30, 2020

ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம் : 300 பேர் கைது

ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்: 300 பேர் கைது
கொரோனா கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனியில் போராட்டம் நடத்திய நிலையில், 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. படிபடிப்பாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குகள் கொண்டு வர தடுப்பு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 38 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது நாடாளுமன்றத்தை நோக்கி புறப்பட முயன்றனர். இதனால் பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தியுடன் 300 பேரை கைது செய்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது அவமானம், ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்கள தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று பாரிஸ், வியன்னா, சுரிச் நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment