மழையுடனான காலநிலை, டெங்கு அதிகரிக்கும் - 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

மழையுடனான காலநிலை, டெங்கு அதிகரிக்கும் - 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் இருந்ததை விட, இரண்டாவது காலாண்டில் குடம்பிகளின் இனப்பெருக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

கொழும்பு மாநகர சபை பிரிவிற்குட்பட்ட நிறுவனங்களில், 50 வீதத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய முறையில் அவசியமான நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால், குறித்த அபாயமானது மழையுடன் மேலும் அதிகரிக்கும் என, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது அதிக ஆபத்துள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, இரத்தினபுரி அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறித்த ஆபத்து நிலைமையானது, தொற்று நோய்க்கு வழிவகுக்காமல் தடுக்க, குறித்த பிரதேசங்களில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad