கருணா வழங்கிய பங்களிப்பை மறந்து செயற்படும் எதிரணியினர் அவர்களின் உட்கட்சி, சமூக பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சி பிரதமர் மஹிந்த கடும் குற்றச்சாட்டு - News View

Breaking

Post Top Ad

Monday, June 29, 2020

கருணா வழங்கிய பங்களிப்பை மறந்து செயற்படும் எதிரணியினர் அவர்களின் உட்கட்சி, சமூக பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சி பிரதமர் மஹிந்த கடும் குற்றச்சாட்டு

கருணா வழங்கிய பங்களிப்பை மறந்து அவரை விமர்சிக்கும் எதிரணியினர் அவர்களின் உட்கட்சி பிரதான பிரச்சினைகளையும் சமூக பிரச்சினைகளையும் மறைத்துச் செயற்பட முயல்வதாக கூறிய பிரதமர், நாட்டுக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சதிகளை தோற்கடிப்போம் என்றார். 

பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் கைவிட்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிய கருணா புலனாய்வு பிரிவிடம் சரணடைந்தார். இதன் காரணமாக அவர் புலிகளுடன் சேர்ந்து அழிந்து போகவில்லை என அவர் கூறினார். 

கருணா அம்மான் புலிகள் இயக்கத்தில் இருக்கையில் இராணுவ முகாங்களை தாக்கி நூற்றுக்கணக்கான படையினரை கொன்றதாக கூறியதை நல்லாட்சி எதிரணி கடுமையாக விமர்சித்தது. இது தொடர்பில் சமூகத்தின் கவனத்தை திருப்பி, எதிரணியின் பிரதான பிரச்சினைகளை மறைக்க முனைகின்றனர். 

2005 இல் நான் ஜனாதிபதியாக தெரிவான பின்னர் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தோம். பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் கைவிட்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகிய கருணா படையினரிடம் சரணடைந்தார். இதன் காரணமாக அவர் புலிகளுடன் சேர்ந்து அழிய வில்லை.பிரபாகரனின் சடலத்தையும் அவர் தான் அடையாளங் காட்டினார். 

'சரியான தரப்பினருக்கு வாக்களிக்குமாறு கோரும் நபர்களின் கடந்த காலம் குறித்தும் கவனிக்குமாறு' கருணா கூறியிருந்தார். புலிகளின் மனதை வெல்வதற்கென இவர்கள் 1989 இல் லொறிகளில் ஆயுதமும் மூடை மூடையாக பணமும் புலிகளுக்கு கொடுத்தார்கள்.

இந்த ஆயுதத்தை பயன்படுத்தியே புலிகள் எம்மை தாக்கினார்கள். 2002 இல் யுத்த நிறுத்தம் செய்து வடக்கு கிழக்கை புலிகளுக்கு எழுதிக் கொடுத்தார்கள். நாட்டை துண்டாக்க நல்லாட்சி அரசு புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர முயன்றது. 

கருணா ஆட்கொலை செய்த காலத்திலும் அதற்குப் பின்னரும் இன்றும் கூட நாட்டை துண்டாடும் நிகழ்ச்சி நிரலே நல்லாட்சி தரப்பிடமுள்ளது. அதனை அவர்கள் கைவிடவில்லை. கருணா கூறிய விடயங்கள் தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad