தேர்தல் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்க செயற்பட வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 23, 2020

தேர்தல் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்க செயற்பட வேண்டும்

(இராஜதுரை ஹஷான்) 

பொதுத் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான சூழல் தற்போது காணப்படுகின்றது. தேர்தல் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாப்பதற்கு செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் நோய்த் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான உரிய வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் தாக்கத்துடன் வாழ வேண்டிய நிலையே காணப்படுகின்றது. தற்போது நாடு வழமை நிலைக்கு திரும்பியுள்ளது. பொதுத் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது காணப்படுகின்றது. 

கொரோனா வைரஸை முழுமையாக ஒழித்த பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுவது தவறான கருத்தாகும். தேர்தலை உரிய காலத்தில் நடத்தி மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மாத்திரம் தேர்தல் ஆணைக்கு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment