தற்கொலை செய்ய நீர்த்தேக்கத்தில் குதித்த பெண் மீட்பு - காப்பாற்ற முயன்ற இளைஞனை தேடும் பணி தொடர்கிறது - News View

About Us

About Us

Breaking

Thursday, May 21, 2020

தற்கொலை செய்ய நீர்த்தேக்கத்தில் குதித்த பெண் மீட்பு - காப்பாற்ற முயன்ற இளைஞனை தேடும் பணி தொடர்கிறது

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை, தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார்.

இன்று (21.05.2020) முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, "தலவாக்கலை ரயில்வே கடவை பாலத்தில் இருந்தே குறித்த யுவதி நீர்த்தேக்கத்துக்குள் குதித்துள்ளார். இதனை கண்ட அவ்வழியாகச் சென்ற நபரொருவர், யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளார்.

நீரிழ் மூழ்கிய யுவதியை மேலே இழுத்துவிட்டு, அவர் நீரிக்குள் சென்றுள்ளார். ஏதேச்சையாக இதனை கண்ணுற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யுவதியை காப்பாற்றியுள்ளார்.

எனினும், காப்பாற்றுவதற்காக முதலில் குதித்த நபர் காணாமல் போயுள்ளார். 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது 32) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும், இராணுவத்தினரும் இணைந்து அவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர். காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment