பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 5, 2020

பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை நீடிப்பு

கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை 2020 மே மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடரபாக தொழில் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் கொரோனா வைரசு தொற்று நிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை 2020 மே மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருப்பதாக தொழில் ஆணையாளர் நாயகம் திரு .ஏ.விமலவீர அறிவித்துள்ளார்.

தமது நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக வர்த்தக சமூகத்தினர் சாதகமாக பதில்களை அளித்துவருவதினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக https://forms.gle/pE64ygeuHrK7TZcH9 என்ற இணையத்தள லிங்க்கில் ((web link) பிரவேசித்து நேரடியாக தகவல்களை வழங்க முடியும் என்றும் இதற்கு மேலதிகமாக தொழில் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.labourdept.gov.lk பதிலளிக்க முடியும் என்றும் தொழில் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment