மங்களவின் கருத்துக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

மங்களவின் கருத்துக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர பௌத்த கிறிஸ்தவ மதங்களிற்கு எதிராக கருத்து வெளியிடுவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் விஜித் விஜயமுனி சொய்சா குற்றம் சாட்டியுள்ளார்.

மங்கள அதிகளவு அவதானத்துடன் இருக்க வேண்டும் பௌத்த மதம் குறித்த அவரது கருத்துக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்
.
மங்கள சமரவீர இவ்வாறு கருத்து வெளியிடுவது இது முதல்தடவையல்ல அவர் பௌத்த மத தலைவர்களை நிந்தித்துள்ளார் என தெரிவித்துள்ள விஜித் விஜயமுனி சொய்சா மங்கள கர்தினால் மல்கம் ரஞ்சித் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிக்கைகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன இது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி இந்த கருத்துக்கள் குறித்து ஆராய்ந்து மங்கள சமரவீரவால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டும் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர தனது இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்,பௌத்த மதத் தலைவர்களை எங்கள் தலைவர்கள் அவமதிப்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்பினால் நாங்கள் பதில் சொல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோம் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எங்கள் வாக்காளர்கள் வணங்கும் மதத் தலைவர்களை எங்கள் கட்சியின் உறுப்பினர் அவமதிக்கும் போது மக்கள் எங்களிற்கு வாக்களிப்பார்கள் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad