மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 19, 2020

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்று பகல் 12.30 இற்கு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டன.

இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad