வாகன தரிப்பிடக் கட்டணத்தை மீண்டும் அறவீட கொழும்பு மாநகர சபை தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

வாகன தரிப்பிடக் கட்டணத்தை மீண்டும் அறவீட கொழும்பு மாநகர சபை தீர்மானம்

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் தரித்து நிற்கும் வாகனங்களுக்கு இன்று (21) முதல் மீண்டும் தரிப்பிடக் கட்டணம் அறவிடத் தீர்மானித்துள்ளதாக, மாநகர சபை ஆணையாளர் திருமதி ரொஷானி திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் காரணமாக நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்ட உத்தரவு காலத்தில்,‌ கொழும்பு மாநகர சபையால்‌ பராமரிக்கப்படும்‌ நகர வீதிகளின்‌ தரிப்பிட கட்டணத்தை வசூலிக்க கொழும்பு மாநகர சபை, தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இது தொடர்பில், அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்த கொழும்பு மாநகர சபை, தற்போதைய நிலையில் வாகன தரிப்பிட கட்டணத்தை அறவிட எந்தவொரு நபருக்கோ, நிறுவனத்திற்கோ அனுமதி வழங்கவில்லை என தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் மாநகர சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்,

கொவிட்‌ (9 (COVID19) நோய்ப்பரம்பலை தொடர்ந்து நாட்டின்‌ இயல்பு நிலையை மீட்டெடுக்கும்‌ முயற்சியில்‌ ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில்‌. கொழும்பு நதரின்‌ வீதிகளில்‌, தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள தரிப்பிட கட்டணத்திற்கான வசூலை 2020 மே 21ஆம்‌ திகதி முதல்‌ அமுல்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

இதன்படி கீழே குறிப்பிடப்பட்ட கட்டணங்களிற்கு அமைவாக தரிப்பிடக்‌ கட்டணங்களை செலுத்துமாறு பொதுமக்களுக்கு இத்தால்‌ அறிவிக்கப்படுகிறது.

கார்‌/ வேன்‌/ கெப்‌ - ரூபா 50 மணித்தியாலத்திற்கு
மோட்டார்‌ சைக்கிள்‌ - ரூபா 20 மணித்தியாலத்திற்கு
முச்சக்கர வண்டி - ரூபா 20 மணித்தியாலத்திற்கு
பேரூந்து/ லொறி - ரூபா 70 மணித்தியாலத்திற்கு
பாடசாலை வேன்கள்‌ -‌ ரூபா 600 மாதமொன்றிற்கு
பாடசாலை பேருந்துகள்‌ - ரூபா 1,000 மாதமொன்றிற்கு
அலுவலக ஊழியர்‌ போக்குவரத்து வேன்கள்‌ -‌ 1200 மாதமொன்றிற்கு
அலுவலக ஊழியர்‌ போக்குவரத்து பேரூந்துகள்‌ - 2000 மாதமொன்றிற்கு

தற்போது ஸ்மார்ட்‌ தரிப்பிட முகாமைத்துவ அமைப்பு ஆனது காலி வீதி, டுப்ளிகேஷன்‌ வீதி மற்றும்‌ இவ்வீதிகளுடன்‌ இணைக்கப்பட்ட அனைத்து வீதிகளிலும்‌ செயற்‌படுத்தப்பட்டு வருகிறது. இந்தப்‌ பகுதிகளில்‌ வாகனங்களை நிறுத்துவோர்‌ தங்களுக்கு வசதியான பின்வரும்‌ முறைகளில்‌ ஒன்றைப்‌ பயன்படுத்தி தரிப்பிடக்‌ கட்டணத்தை செலுத்த முடியும்‌.

தரிப்பிட மானி (Parking Meter) நிறுவப்பட்டுள்ள இடங்களில்‌ 'Pay Point') இற்கு ஊடாக நாணயத்‌தாள்கள்‌ அல்லது Dialog Park Smart Touch Card இனை பயன்படுத்துவதன்‌ மூலம்‌.

ஒன்லை (online) சேவை மூலம்‌ “Tenaga Park Smart" என்னும்‌ Mobile app இற்கு ஊடாக,

“டயலொக்‌" கைபேசி மூலம்‌ #444# இனை அழுத்துவதன்‌ மூலம்‌ (தரிப்பிட‌ கட்டணம்‌ ஆனது உங்கள்‌ கைத்தொலைபேசியின்‌ கட்டணப்‌ பட்டியலுடன்‌ சேர்க்கப்படும்‌.

"Pay n Go" KiOSk இற்கு ஊடாக (டயலொக்‌ ஆர்கேட்ஸ்‌ தவிர)

நகரத்தின்‌ மற்றைய அனைத்துப்‌ பகுதிகளிலும்‌ வாகனத்‌ தரிப்பிடத்தினை பயன்படுத்துபலர்கள்‌ தேவையான சுகாதார நடைமுறைகளை பயன்படுத்தி கொழும்பு மாநகர சபையின்‌ போக்குவரத்து பாதுகாவலரிடம்‌ (Traffic Wardens) அல்லது அந்தந்தப்‌ பகுதிகளில்‌ ஆட்சேர்ப்புச்‌ செய்யப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட தரிப்பிட பணியாளரிடம்‌ தரிப்பிடக்‌ கட்டணத்தைச்‌ செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படூகின்றீர்கள்‌.

2017.07.26 வெளியிடப்பட்ட 2029/29 இலக்க வர்த்தமானி அறிவித்தலில்‌ குறிப்பிடப்பட்‌ட கொழும்பு மாநகர சபையின்‌ தரிப்பிட துணை விதிப்படி செலுத்தப்படாத தரிப்பிடக்‌ கட்டணம்‌ ஆனது தாமதிக்கப்பட்ட கட்டணமாகக்‌ கருதப்படுவதுடன்‌. செலுத்தப்படாத தாமதிக்கப்பட்ட கட்டணத்திற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்‌ அல்லது வாகனத்தின்‌ சக்கரங்களை பூட்டி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்‌ (Tire Locking)

திருமதி ரொஷானி திஸ்ஸநாயக
சட்ட வழக்கறிஞர்‌
மாநகர சபை ஆணையாளர்‌
கொழும்பு மாநகர சபை

No comments:

Post a Comment