படைவீரர் தின ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இரு கடற்படையினருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 19, 2020

படைவீரர் தின ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இரு கடற்படையினருக்கு கொரோனா

தேசிய படைவீரர் தின நினைவு விழாவில் அணிவகுப்பு மரியாதை ஒத்திகையில் ஈடுபட்ட இரு கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இரு கடற்படை வீரர்களுடன் இருந்த சக கடற்படை வீரர்கள் மற்றும் பொலிஸார் நேற்று தனிமைப்பட்டுத்தப்பட்டுள்ளனர். இதில் 122 பொலிஸாரும் அடங்குவதோடு அவர்கள் கட்டான தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஒரு மாத காலம் தனிமைப்படுத்தப்பட்டவர்களே நினைவு தின ஒத்திகையில் பங்கேற்றதோடு அவர்கள் பீசீஆர் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்நதாக கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார கூறினார்.

கோவிட்19 தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. ஒத்திகைக்கு முன்னர் இவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டபோது இவர்களுக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லையெனவும் அறிவிக்கப்படுகிறது. 

பாதுகாப்பு முன்னேற்பாடாக கொரோனா தொற்றிய கடற்படையினர் தங்கியிருந்த இடத்திலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad