அலி ஸாஹிர் மௌலானாவால் தொடரும் மனித நேய பணிகள் - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

அலி ஸாஹிர் மௌலானாவால் தொடரும் மனித நேய பணிகள்

கொரோனா வைரஸ் பரவலின் அபாயகர நிலை காரணமாக, மேல் மாகாணத்தின் பல பகுதிகளிலும் இறுக்கமான ஊரடங்கு நிலை விதிக்கப்பட்டுள்ளதால் தொழில், மருத்துவ தேவைகள் உட்பட இன்னொரன்ன தேவைகளுக்காக கொழும்பு பகுதிகளில் தங்கியிருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

அவர்களுக்கான நிவாரணப் பணிகளை தொடர்ந்தேச்சையாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா களத்தில் நின்று முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.

அந்த நிவாரணப் பணிகளின் அடுத்த கட்டமாக, நேற்று ( 06/05/2020) மேலும் 67 பேருக்கான நிவாரணப் பொதிகளை அலிஸாஹிர் மௌலானா நேரில் சென்று கையளித்தார்.

மேலும், வாழைச்சேனை, மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த ஒரு தொகுதியினரை அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து அனுப்பி வைத்தார். 
உரிய சுகாதார முறைகளைப் பின்பற்றி, உரிய அனுமதிகளையும் பெற்ற பின்னரே அவர்களது சொந்த வாகனங்களில் செல்வதற்கான முழு ஏற்பாடுகளையும் அலிஸாஹிர் மௌலானா செய்துகொடுத்தார்.

இன்றும் 16 பேர்கள் இதே போன்று அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள். மருத்துவத் தேவைகளுக்காகக் சென்று அங்கு தடுப்புக்குள்ளானவர்களே இவ்வாறு இன்று அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருக்குமான சகல விதமான சுகாதாரப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு, காவல் துறையினரின் முறையான அனுமதிகளும் பெறப்பட்டே இவ்வாறு அனுப்பப்படுகிறார்கள். இவையனைத்தையும் அலிஸாஹிர் மௌலானாவே நேரடியாகக் களத்தில் நின்று செய்கிறார்.

அச்சுறுத்தல் நிலவிய போதும், மக்களின் வேண்டுகோளையேற்று நேரடியாகச் சென்று, களத்தில் நின்று அவர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்துகொடுக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா அவர்களின் இந்த மக்கள் பணி மிகவும் பெறுமதி வாய்ந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad