நாடு முழுவதும் 61,621 பேர் கைது - இதுவரை 18,496 பேர் மீது வழக்குத் தாக்கல்,17,322 வாகனங்கள் கைப்பற்றல் - News View

Breaking

Post Top Ad

Friday, May 22, 2020

நாடு முழுவதும் 61,621 பேர் கைது - இதுவரை 18,496 பேர் மீது வழக்குத் தாக்கல்,17,322 வாகனங்கள் கைப்பற்றல்

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை முதல் இதுவரையான காலப்பகுதியில், பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 61,621 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 17,322 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 18,496 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 6,991 பேருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, நேற்று (21) காலை 6.00 மணி முதல், இன்று (22) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 150 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad