பெற்றோல் விலையை ரூபா 5 இனால் அதிகரித்தது ஐ.ஓ.சி - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

பெற்றோல் விலையை ரூபா 5 இனால் அதிகரித்தது ஐ.ஓ.சி

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலையை லீற்றருக்கு ரூபா 5 இனால் அதிகரித்துள்ளது.

நேற்று நள்ளிரவு (18) முதல் இவ்விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 137 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 92 பெற்றோல், விலை அதிகரிப்பின் படி 142 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் இல்லை என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad