ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் சுமார் 2,300 பஸ்கள் சேவையில் - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் சுமார் 2,300 பஸ்கள் சேவையில்

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் சுமார் 2,300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக, இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. 

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும், மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, மாவட்டங்களிற்குள் மாத்திரம் பஸ் சேவைகள் இடம்பெறுவதாகவும் இ.போ.சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.

அனைத்து பஸ் வண்டிகளிலும் பயணிகள் அங்கும் இங்குமாக இஸட் வடிவில் உட்கார அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், கடமைகளில் ஈடுபடும் பயணிகளே அதிகளவில் பஸ்களில் பயணிப்பதாகவும், தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை கொண்டு செல்ல முடியுமா என்பது தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடல் நடத்தப்படுவதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் மாத்திரம் பயணிகள் போக்குவரத்திற்காக பஸ் சேவைகள் இடம்பெற்று வரும் போதிலும், ஊழியர்களின் போக்குவரத்திற்காக ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் பஸ் சேவைகள் இடம்பெறுவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad