இதுவரை கொரோனாவிலிருந்து 14 கடற்படை வீரர்கள் குணமடைவு - News View

Breaking

Post Top Ad

Thursday, May 7, 2020

இதுவரை கொரோனாவிலிருந்து 14 கடற்படை வீரர்கள் குணமடைவு

கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர்கள் இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் அவர்களது உடம்பில் குறித்த வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இன்று (07) அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

குறித்த கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரிந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் அவர்களது உடம்பில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய, இக்கடற்படை வீரர்கள் இருவர் உட்பட வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையிலிருந்த மேலும் 14 கடற்படை வீரர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதோடு, அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்துவதற்காக கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad