இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 09 ஆனது - News View

Breaking

Post Top Ad

Tuesday, May 5, 2020

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 09 ஆனது

இலங்கையில் 9ஆவது கொரோனா நோய் காரணமான மரணம் பதிவாகியுள்ளது.

கொழும்பு 15, மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

IDH வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்றையதினம் (04), இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்த முதலாவது பெண் மரணம் பதிவான நிலையில் தற்போது நிகழ்ந்துள்ள 9ஆவது மரணம், இரண்டாவது பெண் மரணமாக பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad