தனது ஊதியத்தையும், அமைச்சர்களின் ஊதியத்தையும் குறைக்க நடவடிக்கை எடுத்தார் மலாவி ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Sunday, April 5, 2020

தனது ஊதியத்தையும், அமைச்சர்களின் ஊதியத்தையும் குறைக்க நடவடிக்கை எடுத்தார் மலாவி ஜனாதிபதி

தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவி ஜனாதிபதி பீட்டர் முத்தாரிகா, கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்திற்காக அனைத்து அமைச்சர்களின் ஊதியத்தில் 10 சதவீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். 

உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான மலாவி, கடந்த வியாழக்கிழமை தனது நாட்டில் முதல் கொரோனா தொற்றாளரை அடையாளம் கண்டது. 

தற்போது அங்கு மொத்தமாக நான்கு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையிலேயே 79 வயதான அந்நாட்டு ஜனாதிபதி பீட்டர் முத்தாரிகா, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். 

அதன் ஒரு பகுதியாகவே தனது ஊதியத்தையும் அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களின் ஊதியத்தையும் 10 சதவீதமாக குறைத்து, அதனை கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்காக பயன்படுத்த தீர்மானம் எடுத்துள்ளார். 

மலாவியில் பூட்டுதல் நடவடிக்கை எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. எனினும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வீட்டிலிருந்து பணிகளை முன்னெடுக்குமாறும், சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அது மாத்தரமன்றி இறுதிச் சடங்குகள், தேவாலய நிகழ்வுகள் மற்றும் அரசியல் பேரணிகள் போன்றவற்றில் 100 க்கும் மேற்பட்டவர்கள் கூடக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதேவளை புகையிலை மலாவியின் முக்கிய ஏற்றுமதிப் பொருளாக உள்ளது. அதனால் வெளிநாட்டு நாணய வருவாயைப் பராமரிக்கவும் விவசாயிகளை வணிகத்தில் வைத்திருக்கவும் அனைத்து புகையிலை சந்தைகளும் திறந்திருக்கும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment