அதிக விலைக்கு மஞ்சள் தூள் விற்போருக்கு எதிராக நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 22, 2020

அதிக விலைக்கு மஞ்சள் தூள் விற்போருக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு மஞ்சள் தூள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ கிராம் மஞ்சள் தூளை விற்பனை செய்வதற்கான அதிகூடிய சில்லறை விலை 750 ரூபா என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விலை நிர்ணய வர்த்தமானி அறிவிப்பு, நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்றுமுன்தினம் (21) வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு சந்தைகளில் மஞ்சள் தூளுக்கான பற்றாக்குறை நிலவுவதோடு, இப்பற்றாக்குறை காரணமாக சந்தைகளில் மஞ்சள் தூள் பல்வேறு விலைகளில் விற்கப்படுகின்றமை தொடர்பில் தெரியவந்துள்ளது. 

எனவே கட்டுப்பாட்டு விலையில் மஞ்சள் தூளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad