கொழும்புக்குச் சென்று யாழ். வந்த லொறிகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

கொழும்புக்குச் சென்று யாழ். வந்த லொறிகளின் சாரதிகள், உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை!

யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து கொழும்புக்குச் சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவரும் லொறிகளின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களில் முதற்கட்டமாக 30 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த லொறிககளின் சாரதிகள், உதவியாளர்கள் என 30 பேரின் மாதிரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் பெறப்பட்டது.

30 பேரின் மாதிரிகளும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து நேற்றுப் பெறப்பட்டன. அவர்களின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, 30 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டம் கொரோனா வைரஸ் பரவல் அபாய வலயமாகக் காணப்படும் நிலையில் அங்கு சென்றுவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாரவூர்திச் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment