தியாவட்டவான் காலித் பின் வலீத் ஜும்ஆப்பள்ளிவாயலினால் உலருணவுப் பொருட்கள் வினியோகம் - News View

Breaking

Post Top Ad

Monday, April 6, 2020

தியாவட்டவான் காலித் பின் வலீத் ஜும்ஆப்பள்ளிவாயலினால் உலருணவுப் பொருட்கள் வினியோகம்எஸ்.எம்.எம்.முர்ஷித்

உலகையே அச்சுருத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊரங்குச் சட்டத்தின் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியில் சிக்குன்டுள்ளனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தியாவட்டவான் காலித் பின் வலீத் ஜும்ஆப்பள்ளிவாயல் நிறுவாகத்தினர் அப்பகுதி மக்களின் துயர்துடைக்க முயற்சி மேற்கொண்டனர்.

நிருவாகத்தினரின் அயராத முயற்சியினால் பள்ளிவாயல் எல்லைக்குற்பட்டவர்களுக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உலர் உணவு பொருட்களை தந்துதவிய அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கல்குடா கிளையினர், எச்.எம்.எம்.றியாழ், கோறளைப்பற்று மேற்க்கு ஒட்டமாவடி பிரதேச உறுப்பினர் ஐ.எல். பதுர்தீன், எம்.யூ றிஸ்வான், கலீல் மோட்டார்ஸ் தியாவட்டவான் உரிமையாளர் ஏ.பி. கலீல், ஏ.எல். லத்தீப் மற்றும் தியாவட்டவான் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினருக்கும் பள்ளிவாயல் நிறுவாகத்தினர் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

அத்துடன், நிவாரணப் பணியினை இலகுவாகவும் விரைவாகவும் வழங்குவதற்கு உதவிய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில், தியாவட்டுவான் கிராம சேவகர் ஏ.எல்.எம்.ஜெவ்பர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். தரணிதரன் ஆகியோருக்கும் பிரதேச மக்கள் சார்பாகவம் பள்ளிவாயல் நிறுவாகம் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

அத்தோடு, இரண்டாம் கட்ட உலர்உணவு வினியோகத்திற்கான நடவடிக்கைகளும் மேட்படி நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படுகிறது என்பதுன் குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad