இம்மாத இறுதியில் O/L பெறுபேறு - மாவட்ட, அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல்கள் வெளியிடப்படமாட்டாது - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 3, 2020

இம்மாத இறுதியில் O/L பெறுபேறு - மாவட்ட, அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல்கள் வெளியிடப்படமாட்டாது

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான அல்லது அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல்கள் வெளியிடப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 

2019 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 4,987 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதோடு, இதில் 7 இலட்சத்து 17,008 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். 

இதேவேளை இம்முறை இடம்பெறவுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்திருந்த நிலையில், எதிர்வரும் 09ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad