தென்கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகளிலிருந்து வருவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை - கப்பலில் வருவோரை அனுமதிப்பது இடைநிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, March 3, 2020

தென்கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகளிலிருந்து வருவோரை தனிமைப்படுத்த நடவடிக்கை - கப்பலில் வருவோரை அனுமதிப்பது இடைநிறுத்தம்

தென்கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர் உள்ளிட்ட அனைத்துப் பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

குறித்த நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (03) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இவ்வாறுதெரிவித்தார்.

இதேவேளை பயணிகள் கப்பலில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை, நாட்டிற்குள் அனுமதிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad