மக்களை தனிமைபடுத்த கூறும் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன்? - சிவசேனா கேள்வி - News View

Breaking

Post Top Ad

Friday, March 20, 2020

மக்களை தனிமைபடுத்த கூறும் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன்? - சிவசேனா கேள்வி

மக்களை தனிமைப்படுத்த கூறும் பிரதமர் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

இதற்காக வருகின்ற 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் மக்களை தனிமைப்படுத்த கூறும் பிரதமர் மோடி பாராளுமன்றத்தை மட்டும் நடத்துவது ஏன்? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. 

அந்தக் கட்சியின் பத்திரிகையான சாம்னாவில் இது தொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது கொரோனாவை கட்டுப்படுத்த மக்களை தனிமைப்படுத்துமாறு பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அரசு பணிகளை குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மற்றொரு புறம் அவர் பாராளுமன்றத்தை தொடர்ந்து நடத்துகிறார்.

கொரோனாவை கட்டுபடுத்த மும்பை முழுவதையும் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மூடியுள்ளார். டெல்லியில் அப்படியில்லை.

பாராளுமன்ற கூட்டம் நடைபெறுவதால், எம்.பி.க்கள், அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டியிருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க வேண்டுமெனில் பாராளுமன்ற கூட்டத்தையும் தள்ளி வைத்திருக்க வேண்டும். என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad