உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு - News View

Breaking

Post Top Ad

Monday, March 2, 2020

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

முதலாவது இடைக்கால அறிக்கை 2019 டிசம்பர் 20ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இவ் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மேலதிக விசாரணைகளை தொடர்ந்து தயாரிக்கப்படும்.

ஆணைக்குழுவின் தலைவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா ஏனைய உறுப்பினர்களான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர்களான நிஹால் சுனில் ராஜபக்ஷ மற்றும் ஏ.எல்.பந்துலகுமார அத்தபத்து, நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் டப்ளியு.எம்.எம்.ஆர்.அதிகாரி, ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.பி.பீ.ஹேரத் ஆகியோரும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad