மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் கொழும்புக்கு அழைத்தார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் - News View

Breaking

Post Top Ad

Monday, March 2, 2020

மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் கொழும்புக்கு அழைத்தார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடத்துவத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதி ஆணையாளர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எமது செய்தி பிரிவிற்கு அவர் மேலும் தெரிவிக்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் தினத்திற்கான வர்த்தமானி அறிவிப்பு இடம்பெறுவதுடன் அதனைத் தொடர்து தேர்தல் நடைபெறும் தினமும் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுவினர் கட்டுப்பணம் செலுத்த வேண்டிய முறை, தபால் மூல வாக்குகளை பயன்படுத்தவது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் தினம் போன்றன இதன் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை பொதுத் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இம்மாதம் 5 ஆம் திகதி அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் கொழும்புக்கு அழைத்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர் எண்ணிக்கை 271,789 இனால் அதிகரித்திருப்பதாகவும், வாக்களிப்பு மத்திய நிலையங்களின் எண்ணிக்னைகயை அதிகரிப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் சன்ன டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad