அமெரிக்காவின் மில்லினியம் செலேஞ்ச் கோபரேஷன் (MCC) ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திடாது - அறிவித்தார் அமைச்சரவை பேச்சாளர் பந்துல - News View

Breaking

Post Top Ad

Thursday, February 27, 2020

அமெரிக்காவின் மில்லினியம் செலேஞ்ச் கோபரேஷன் (MCC) ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திடாது - அறிவித்தார் அமைச்சரவை பேச்சாளர் பந்துல

அமெரிக்காவின் மில்லினியம் செலேஞ்ச் கோபரேஷன் (Millennium Challenge Corporation) ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில்லை என, அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தற்போது (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

குறித்த உடன்படிக்கை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கமைய குறித்த முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மிலேனியம் சவால்கள் திட்டம் (MCC-மிலேனியம் செலேஞ்ச் கோபரேஷன்) தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் ஆரம்ப அறிக்கை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி, ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

மில்லினியம் சவால் ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு திருப்பிச் செலுத்தாத நிதியுதவியாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூ. 85 பில்லியன்கள்) வழங்கப்படவிருந்ததோடு, இதில் திட்டத்திற்கான நிதியாக 447.5 மில்லியன் அமெரிக்க டொலர்களும், வசதிகளை மேற்கொள்வதற்கா 32.5 மில்லியன் அமெரிக்க டொலர்களும் உள்ளடங்குகின்றன.

அதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் போக்குவரத்து கட்டமைப்பை விருத்தி செய்யவும், 67 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணி வேலைத்திட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த மானியம் போக்குவரத்து மற்றும் காணி ஆகிய இரண்டு பெரிய திட்டங்களை செயல்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டதாகும்.

போக்குவரத்து திட்டம்
மத்திய சுற்றுவட்ட வலையமைப்பிலுள்ள (Central Ring Road Network) பகுதிகளில் வீதிகளை நவீனமயமாக்குதல், பொது பஸ் சேவைகளை நிர்வகித்தல், போக்குவரத்து நெரிசலை முகாமைத்துவம் செய்தல், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான அலுவலகத்தை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காணி திட்டம்
தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் அரசசாங்கத்திற்கு சொந்தமான மற்றும் தனியாருக்கு சொந்தமான காணிங்களை அளவிட்டு, காணி உறுதிப்பத்திரம் இல்லாதிருக்கின்ற, அனுமதிப்பத்திரம் மூலம் காணி உரிமை கொண்டுள்ளவர்களுக்கு உரிய காணிபத்திரத்தை வழங்குவதும், காணிகளை டிஜிற்றல் முறை மூலமான அறிக்கை மூலம் பராமரித்தல்.

இதில் பல்வேறு நீண்ட கால பிரச்சினைகள் காணப்படுவதாக பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இதில் கைச்சாத்திடுவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad