கொரோனா அச்சம் காரணமாக ஜனாதிபதியையும் தனிமைப்படுத்தியது மொங்கோலியா - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

கொரோனா அச்சம் காரணமாக ஜனாதிபதியையும் தனிமைப்படுத்தியது மொங்கோலியா

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய மொங்கோலிய ஜனாதிபதி பட்டுல்கா கல்ட்மா வைரஸ் அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

மொங்கோலியாவின் செய்தி நிறுவனமான மொன்ஸ்டமே இதனை அறிவித்துள்ளது. 

சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீனா பிரதமருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி நாடு திரும்பிய மொங்கோலிய ஜனாதிபதியையும் அவரது குழுவினரையும் விமான நிலையத்தில் வைத்தே அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர் என மொங்கோலிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 

இதன் மூலம் கொரரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட முதல் ஜனாதிபதியாகியுள்ளார் பட்டுல்கா கல்ட்மா.

No comments:

Post a Comment

Post Bottom Ad