கம்பஹா கொள்ளை தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் விளக்கமறியல் - News View

Breaking

Post Top Ad

Friday, February 28, 2020

கம்பஹா கொள்ளை தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் விளக்கமறியல்

கம்பஹா, உடும்கம்பொல, கெஹல்பத்தர மருத்துவ நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ரூபா 45 இலட்ம் கொள்ளை தொடர்பில் கைதான 6 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவ நிலையத்திற்குள் நுழைந்து ரூபா 45 இலட்சத்து 96 ஆயிரம் (ரூ. 45,96,000) பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளை தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள், கடந்த தேர்தல் சமயத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித பங்கு கொண்ட வெள்ளை வேன் ஊடகவியலாளர் மாநாட்டில் (நவம்பர் 10) கலந்துகொண்ட இரு சந்தேகநபர்களும் உள்ளடங்குகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad