மிருகங்களையும் விட்டு வைக்கவில்லை : ஹொங்கொங்கில் நாய்க்கும் கொரோனா ! - News View

About Us

About Us

Breaking

Friday, February 28, 2020

மிருகங்களையும் விட்டு வைக்கவில்லை : ஹொங்கொங்கில் நாய்க்கும் கொரோனா !

ஹொங்கொங்கில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நபர் ஒருவரின் செல்லப் பிராணியான நாய் ஒன்றிற்கு சிறதளவு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

குறித்த நாயினை சோதனைக்குட்படுத்தியபோது சிறிதளவு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு செல்லப் பிராணியான நாயினை சோதனைக்குட்டுத்திய போது நாய் உண்மையினல் நோயால் பாதிப்பபட்டுள்ளதா, அல்லது அதன் வாய் மற்றும் மூக்கில் சுற்றுச்சூழல் மாசுபட்டதன் விளைவாக ஏதாவது தொற்று ஏற்பட்டுள்ளதா என அந்நாட்டு அதிகாரிகள் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஹொங்கொங்கில் செல்லப் பிராணிகளை கொரோனா வைரஸ் தாக்குவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவே இது செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோயின் தாக்கம் செல்ல பிராணிகளுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 

அதேவேளை வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு ஏதாவது தொற்று ஏற்படும் பட்சத்தில் அதை உடனடியாக தனிமை படுத்த வேண்டுமென அந்நாட்டு சுகாதார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் செல்லப் பிராணி கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதலாவது பதிவாக இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment