வுகானிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பேருந்துகள் மீது கல்வீச்சு : உக்ரைனில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 22, 2020

வுகானிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் - பேருந்துகள் மீது கல்வீச்சு : உக்ரைனில் சம்பவம்

சீனாவின் வுகான் நகரத்திலிருந்து மீட்கப்பட்டவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மீது உக்ரைனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்டவர்களுடன் மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பொல்டாவா பிராந்தியத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

சீனாவிலிருந்து மீட்கப்பட்டவர்களை நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) தனிமைப்படுத்தலிற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீதே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. 

45 உக்ரைன் பிரஜைகள் மற்றும் 27 வெளிநாட்டவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுகொண்டிருந்த பேருந்திகளை வழிமறித்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
ஆர்ப்பாட்டக்காரர்கள் பேருந்துகளின் மீது கல் வீச்சினை மேற்கொண்டுள்ளனர். பேருந்தினை நோக்கி தீப்பந்தங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படையினர் அந்த முற்றுகையை முறியடித்து பேருந்துகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

வுகானிலிருந்து அழைத்துவரப்பட்ட சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளது என அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சலே இந்த ஆர்ப்பாட்டங்களிற்கு காரணம் என உக்ரைனின் பாதுகாப்பு சேவையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஆர்ப்பாட்டக்காரர்களை கருணையுடன் செயற்படுமாறு உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை வுகானிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கு ஆதரவு வெளியிட்டுள்ள உக்ரைனின் சுகாதார அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர்களுடன் தங்கியிருக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார். 

நான் அவர்களுடன் தங்கியிருந்தே எனது அமைச்சினை ஸ்கைப் மூலம் நிர்வகிக்கப் போகின்றேன் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மக்களின் பதட்டத்தினை குறைப்பதற்கு இதுவே வழி என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad