மத்தள விமான நிலையத்திலிருந்து மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்துக்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Saturday, February 29, 2020

மத்தள விமான நிலையத்திலிருந்து மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்துக்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம்

மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்துக்களை ஆரம்பிப்பதற்கும், இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிராந்திய விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த தீர்மானத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இது தொடர்பில் அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன, விளக்கமளிக்கையில், இந்த விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக சில வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. 

அதன் பிரகாரம் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் 60 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட விமான நிலைய சில விதிவிலக்கு வரி விமான நிலையத்துக்குள் அறவிடுவதை 2 வருட காலத்துக்கு முழுமையாக இடை நிறுத்துத்தப்படும்.

இந்த விமான நிலையத்தில் வெளியேறும் உபசரிப்பு பணியாளர்களுக்கான கட்டணத்துக்கு கழிவை வழங்குதல், நில செயற்பாட்டு கட்டணத்துக்காக கழிவு வீதத்தை வழங்குதல், நிவாரண விலைக்கு விமானத்திற்குத் தேவையான எரிபொருளை விநியோகிக்கவும் முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு வருட காலத்துக்கு துணைப்பட்டியல் இடப்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் தரை இறங்கல் மற்றும் விமானங்களை நிறுத்தி வைத்தலுக்கான கட்டணத்தை கைவிடுதல் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

கொழும்பு, இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில், 60 அமெரிக்க டொலர் விமான நிலைய விதிவிலக்கு வரியில் 50 சதவீத்தை மாத்திரம் அறிவிடுதல், நிவாரண விலைக்கு விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை விநியோகித்தல், முன்னேற்றத்தை ஊக்குவிக்க ஒருவருட காலத்துக்கு துணை பட்டியலிடப்பட்ட விமான நிறுவனத்துக்கு தரை இறங்குதல் மற்றும் விமானங்களை நிறுத்தி வைத்தலுக்கான கட்டணத்தை கைவிடுதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad