கொரோனாவால் தென் கொரியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - இஸ்ரேல், லெபனானில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம்! - News View

Breaking

Post Top Ad

Friday, February 21, 2020

கொரோனாவால் தென் கொரியாவில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - இஸ்ரேல், லெபனானில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம்!

தென் கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் ஒரு நபர் உயிரிழந்து விட்டதாக தென் கொரியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் 1965 ஆம் ஆண்டில் பிறந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் நீண்ட காலமாக நுரையீடல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாகவும் குறித்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது. 

தனது நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரை அடையாளம் கண்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சர் ஹம்மத் ஹசன் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர் 45 வயதான பெண் ஆவார். குறித்த நபர் நேற்றைய தினம் ஈரானின் கோம் நகரிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் ஹம்மத் ஹசன் கூறினார். 

அத்துடன் தமது நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனரா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எனினும் அவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

இதேவேளை ஈரானிலிருந்து திரும்பும் அனைத்து பணிகளையும் தற்போது 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இஸ்ரேலியல் கொரோனா தொற்று தொடர்பான முதல் பதிவை இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 

அதன்படி ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து நாடு திரும்பியுள்ள ஒரு பெண் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

டயம்ணட் பிரின்சஸ் கப்பலிலிருந்து இஸ்ரேலுக்கு திரும்பிச் சென்ற 11 பயணிகளில் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதேவேளை ஏனைய 10 பேரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகவில்லை என்பது தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது. 

எனினும் இஸ்ரேல் வந்த பயணிகள் அனைவரும் டெல் அவிவ் அருகிலுள்ள ஷெபா வைத்தியசாலையில தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 14 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்கள். 

இதனிடையே இஸ்ரேலைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் அவர்கள் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad